குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் உதாரணமாக தேவயானி இருக்கிறார்..... ஆர்.கே.செல்வமணி பேச்சு
நடிகை தேவயானியின் திருமணம் அதிர்ச்சி செய்தியாக இருந்தது என இயக்குனர் ஆர் கே செல்வமணி கலகலப்பாக பேசி இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பின் தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் "நிழல் குடை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ஆர் கே செல்வமணி, திரை பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பரபரப்பு செய்தியாக இருக்கும். ஆனால் தேவயானியின் திருமணம் அதிர்ச்சி செய்தியாக இருந்தது என கலகலப்பாக பேசினார்.
மேலும், சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு மட்டுமல்ல, குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கும் உதாரணமாக தேவயானி இருக்கிறார் என்று கூறினார்.
No comments