பிரதமர் மோடி நாளை (ஏப்.6) ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அவர் தமிழகம் வரும்போதெல்லாம் 'வெல்கம் மோடி' என்று பா.ஜ.,வின் ஊடகப் பிரிவு சார்பில் ஹேஷ்டாக்கை டிரெண்டிங் செய்வது வழக்கம். அதுபோல இன்று (ஏப்.5) காலை முதல் 'நன்றி மோடி' என்ற ஹேஷ்டாக்கை டிரெண்டிங் செய்யும்படி ஊடக பிரிவுக்கு மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி ஊடகப்பிரிவு பார்வையாளர் அர்ஜூனமூர்த்தி, மாநில தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத், செயலாளர் செந்தில்குமார் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments