கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய பஞ்சகவ்யா செயல்முறை விளக்க நிகழ்ச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அவரிக்காடு கிராமத்தில் பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, கீழ்வேளூரைச் சேர்ந்த வேளாண்மை கல்லூரி மாணவர்களின் (சந்துரு,பாலாஜி ஷங்கர்,ஹரிகிஷோர்,ஜெயமுருகன்,சையத் பஷீர்,தரீஷ்,யோக சீனிவாசன்) ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இளங்கலை பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்று, பஞ்சகவ்யாவின் தயாரிப்பு முறையும் பயிர்களுக்கு ஏற்படும் நன்மைகளும் பற்றி விளக்கினர். இது பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோமியம் ஆகிய ஐந்து பொருட்களையும் பயன்படுத்தி பஞ்சகவ்யா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அவர்கள் நேரலையில் செய்து காட்டினர்.
No comments