கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மஞ்சள் நிற ஒட்டு பொறி குறித்து செயல்விளக்கம் அளித்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியத்தில் உள்ள எட்டுக்குடி கிராமத்தில் வேளாண் தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சியினை நடத்தினர்.
இதில் மஞ்சள் நிற ஒட்டும் பொறியின் செயல்முறைகளையும் மற்றும் அதன் பயன்களையும் அக்கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். இந்த பொறியை நெல்,உளுந்து ,தென்னை போன்ற பயிர்களில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று விவசாய்களுக்கு எடுத்துரைத்தனர் . மேலும் இத்தொழில்நுட்பம் இரசயன உரங்களுக்கு மாற்று வழியாக அமைகிறது என்று விவசாயிகளுக்கு தெளிவுரையற்றினர்.நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களான துரையரசு,ஜீவா,கௌதம்,கரண்,ஸ்ரீநாத்,ராகேஷ் ஆகியோர் செயல்விளக்கம் செய்து கட்டினர்.
No comments