• Breaking News

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்

     


    இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பு கம்பீருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் புகார் கொடுத்துள்ள நிலையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக டெல்லி காவல்துறையில் கௌதம் கம்பீர் புகார் கொடுத்துள்ளார். மேலும் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது 26 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது கம்பிருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments