கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பயிர்களில் மகசூலை குறைக்கும் இலை பேன் பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் வேளாண் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை எடுத்து திருக்குவளை கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களை செயல் விளக்கம் செய்தனர்.
இதில் பயிர்களில் மகசூலை குறைக்கும் இலை பேன் பூச்சியை கட்டுப்படுத்தும் நீல நிற ஒட்டும் பொறி எனும் தொழில்நுட்பம் பற்றி செயல் விளக்கம் செய்தனர். இதில் பூச்சியினால் ஏற்படும் தாக்கங்களையும், அதனை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதையும் தெளிவாக மாணவர்கள் விளக்கம் அளித்தனர். இதனை திருக்குவளை கிராம விவசாயிகள் வரவேற்று ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
No comments