• Breaking News

    பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழக முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம்


    அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தாம்பரம் சட்டமன்றத் தொகுதி பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழக முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.பி.மனோகரன் தலைமையில் மாவட்ட கழக பிரதிநிதி முடிச்சூர் 8வது வார்டு உறுப்பினர் ஏ.அருள், பரங்கிமலை மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் முன்னாள் முடிச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சசிகலா கல்கி பரங்கிமலை மேற்கு ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் டிவிஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கழக வர்த்தக அணி செயலாளர் சீ.த.செல்ல பாண்டியன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாவலூர் முத்து,  செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள் முடிச்சூர் ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments