• Breaking News

    கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலர் அறிவழகன் ஏற்பாட்டில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது


    கும்மிடிப்பூண்டி பேரூர் கழக திமுக செயலாளர் இரா. அறிவழகன் ஏற்பாட்டில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் உள்ள ஏவிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 


    இந்நிகழ்ச்சிக்கு பேரூர் அவை தலைவர் இரா ரமேஷ் தலைமை தாங்கினார்.பேரூர் கழக திமுக செயலாளர் இரா. அறிவழகள் வரவேற்புரை நிகழ்த்தினார். பேரூ ராட்சி தலைவர் சகிலா அறிவழ கன், உள்ளிட்ட பலர் முன்னிலை வைத்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன், முன்னாள் எம்எல்ஏ சி எச் சேகர், மாவட்ட அவைத்தலைவர் பகலவன், மாவ ட்ட துணை செயலாளர் கே.வி.ஜி உமாமகேஸ்வரி, எம்எல் ரவி, உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.


     நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா பா.செ. குணசேகரன்,மாவட்ட பொருளாளர் ரமேஷ், கும் மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு மணிபாலன், முன்னாள்.மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் உன்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, திமுக நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்க செயலாளர்கள் கழக முன்னோடிகள் என பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வரும் 18ஆம் தேதி பொன்னேரி பகுதி க்கு வருகை புரியும் தமிழக முதல்கும்மிடிப்பூண்டி, நகர பகுதியில் இருந்து ஏராளமானோர் சென்று சிறப்பான வரவேற்பு அளிப்பது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக வல்லூர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ். நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவிப்பது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    No comments