• Breaking News

    நாகையில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கூட்டம்.... புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி.....

     


    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டரங்கில்  நுகர்வோர் பேரமைப்பின் செயற்குழு கூட்டம் மாநில பேரமைப்புத் தலைவர் பால்பர்ணபாஸ் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு அமைப்பின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான  வெண்ணிலா தலைமை வகித்தார்.

    மாவட்ட நிர்வாகியும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான விஜயராகவன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், அமைப்பின் வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள் கருத்தில் கொண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நம்பியார் நகர் பகுதியில் 15 ஆண்டுகளாக சாலை இல்லதால் உடனடியாக பேரமைப்பின் சார்பில் சாலை போட்டு தரப்படும் என பேட்டி அளித்துள்ளனர்.

    நாகை மாவட்ட செய்தியாளர்: ஜி.சக்கரவர்த்தி



    No comments