• Breaking News

    மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை குன்னூர் வருகை

     


    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய முப்படை அதிகாரிகள் மட்டுமின்றி, இந்தியா நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மிக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பட்டமளிப்பு விழா நடக்கிறது. விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார்.

    இதற்காக அவர் நாளை (புதன்கிழமை) டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை தளம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வருகிறார். அங்கு இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    விழா முடிந்ததும் சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று, அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார். மத்திய மந்திரி வருகையையொட்டி வெலிங்டன் ராணுவ பயற்சி கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    No comments