சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை...... கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற பூ அலங்காரம் .....
தமிழக சட்டசபையில் தற்போது துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.
பொதுவாக ஒவ்வொரு மானியக் கோரிக்கையின்போதும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில், தினமும் கருணாநிதி நினைவிடத்தில் பூ அலங்காரமும் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையையொட்டி அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமயத்தினரின் மனங்களை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.
No comments