• Breaking News

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் சென்னை வடக்கு பொன்னேரி கோட்டம் துணை மின் நிலையத்தில் நடைபெற்றது


    தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் பராமரிப்பு கழகம் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம் சென்னை வடக்கு பொன்னேரி கோட்டம் துணை மின் நிலைய அலுவலகத்தில் செயற்பொறியாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

     இதில் மின் கட்டணம் மாற்றம் மின் மீட்டர் பொறுத்தல் குறைந்த மின் அழுத்தம் மின்கம்பம் சேதம், பெயர் மாற்றம் திருத்தம்  உள்ளிட்ட பல்வேறு புகார் மனுக்கள் அதிகாரிகளிடம் அளித்தனர்.

    முகாமில்  உதவி செயற்பொறியாளர்கள் பன்னீர்செல்வம் ,சிவசங்கரன் ,பெருமாள், கதிரவன், சிவகுமார் மற்றும் பிரபாகரன், ரவிச்சந்திரன் ,சரவணன் ,ராஜேந்திரன், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ,ஆரம்பாக்கம், திருப்பாலைவனம், மீஞ்சூர், தேவம்பேடு கோட்ட உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments