அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகள்..... போலீசார் விசாரணை


 தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைந்துள்ளது. அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போன்ற தினங்களில்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். இந்நிலையில் திடீரென அந்த சிலையின் கழுத்தில் திமுக மற்றும் பாஜகவின் கொடிகள் போர்த்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நள்ளிரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் கட்சி கொடிகளை சிலையின் மீது போட்டுள்ளனர்.

இதனை இன்று காலை கட்சி நிர்வாகிகள் பார்த்த நிலையில் அவர்கள் அங்கு ஒன்று கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுள் சம்பவ இடத்திற்கு வந்து சிலையின் மீது இருந்த கட்சி கொடிகளை அகற்றினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments