மட்டன் பிரியாணி ஆர்டர் செய்த வாலிபருக்கு கூல் லிப் பிரியாணி கொடுத்த பிரபல ஹோட்டல்

 


சென்னை திருநின்றவூர் பகுதியில் பிரபலமான காதர் பாய் பிரியாணி கடையில் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கௌதம் என்பவர் சொமோட்டோ மூலம் அந்த உணவகத்தில் இருந்து 1 மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

சூடாகவும் சீராகவும் இருந்த அந்த பிரியாணியை அவர் வாங்கிச் சாப்பிட முயற்சித்தபோது, அதில் ‘கூல் லிப்’ போதைப்பொருள் மாதிரியான பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அவர் உணவகத்துக்கு சென்று முறையிட்டபோது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

இது போன்ற பிரபல உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு குறித்து இவ்வாறு அலட்சியம் காட்டப்படுவதால், உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கௌதம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments