திருக்குவளையில் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழ் வாரமாக கொண்டாடும் தமிழக அரசுக்கு முத்தமிழ் மன்றம் பாராட்டு
நாகை மாவட்டம் திருக்குவளை நூலக வளாகத்தில், திருக்குவளை முத்தமிழ் மன்றமும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து பாரதிதாசன் பிறந்தநாள் மற்றும் உலக புத்தக நாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவர் அருவி தாசன் தலைமை வகித்தார். மன்றத் தலைவர் குவளை சோ கணேசன் முன்னிலை வகித்தார். நூலகர் தி.சங்கர் வரவேற்றார்.
விழாவில், பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருது பெற்றிருக்கின்ற கவிஞர் வெற்றிப்பேரொளி கவிஞர் முல்லை பாண்டியன் கவிஞர் சிவ.இமயசிவன் ஆகியோரின் இலக்கிய பங்களிப்பைப் பாராட்டி சால்வை அணிவித்து பாராட்டப்பட்டது. நாகை பகுத்தறிவுப் பேரவை தலைவர் எஸ் குணசேகரன் வாழ்த்திப் பேசினார். மன்றத்தின் துணைச் செயலாளர் கவிஞர் செந்தூர்குமார் புத்தகம் ஒர் ஆயுதம் என்ற தலைப்பில் பேசினார். திருவாரூர் கவிஞர் ஜெக. வீரராசன் புதியதோர் உலக செய்வோம் என்ற தலைப்பில் பேசினார் .விருது பெற்ற கவிஞர்களின் சார்பாக கவிஞர் வெற்றிப் பேரொளி ஏற்புரை வழங்கினார். உலக புத்தக நாளை முன்னிட்டு கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியருக்கு புத்தகப் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், ஆரூர் கவிஞர் முருகன் ஜெ.மு.ராதா, கவிஞர் கவியரசன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சுதா அருணகிரி, கோளிலிச் செல்வன், கவிஞர் பாலமுத்துமணி ,எம் .சக்திவேல்,ஏ.கே.ராஜேந்திரன் ,ஆசிரியர் மோகன்ராஜ் ம.கண்ணதாசன், நூலகர் அன்பழகன் மற்றும் மாணவ, மாணவிகள் பேசினர். பாடகர் மோகன் இங்கர்சால் ,பாரதிதாசன் தமிழிசைப்பாடல்களை பாடினார். விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வாரமாக கொண்டாடும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. முடிவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்த கவிஞர் செந்தூர் குமார் நன்றி கூறினார்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments