திருக்குவளை அருகே இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது
இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை பெருவிழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது.
மே 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா வரும் மே 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.சித்திரை விழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் மே.11ஆம் தேதியும்,மே.12 ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments