கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகளான அபிநயா, கோபிகா, ஜனனி, ஜெப ஜாண்சி, ஜிஷா மேரி, ஜோஷ்னா, மகாலட்சுமி, சௌம்யா ஆகியோர் கீழ்வேளூர் ஊராட்சி அத்திப்புலியூர் கிராமத்தில் களப்பணி மேற்க் கொண்டனர்.அங்கு விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாமல் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெயில் உள்ள முக்கிய செயலில் உள்ள சேர்மமான அசாடிராச்டின், என்ற உயிர் பூஞ்சைக்கொல்லியை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறையை செயல் திறன் விளக்கமாக செய்து காண்பித்தனர். அதனை தொடர்ந்து மாணவிகள் அதன் பயன்கள் குறித்தும் அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments