கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் நா. பரிமளம், ஆத்துப்பாக்கம் கிளைக் கழக செயலாளர் கே. விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார்.
மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சி. எச். சேகர், மாவட்ட அவைத் தலைவர் பகலவன்,உமாமகேஷ்வரி, ஒன்றிய செயலாளர் மணிபாலன், பொதுகுழு உறுப்பினர்கள் குணசேகரன், ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் வேதாச்சலம் ரவி சுகு முன்னாள் கவுன்சிலர் சரவணன் சாந்தி ஜெயராமன், ராமஜெயம், காளத்தி, ஜெயச்சந்திரன், சாம்பசிவம்,சங்கர், மாரிமுத்து, பத்ரிநாத், குமார், செல்வம், லோகேஷ், சரத், விநாயகம், ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக பேச்சாளர் சிவாஜி பசும்பொன் ரவிச்சந்திரன், ராஜராஜேஸ்வரி ஆகியோர் தமிழகத்திற்கு நிதி தராமல் ஏமாற்றும் மோடி அரசை கண்டித்து விளக்கமாக பேசினர்.தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு காலணிகள் மற்றும் ஊனமுற்றோர் - விதவைப் பெண்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினார்.
அத்தோடு இந்தியை தமிழகத்திற்குள் வரவிட மாட்டோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் தொண்டர்கள் கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது. வருகை தந்த அனைவருக்கும்.கிளை செயலாளர் சாம்பசிவம் நன்றி கூறினார்.
0 Comments