• Breaking News

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை செயலாளர் துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரத்தில் காலை உணவு வழங்கப்பட்டது


    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இளம் தலைவர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கழக முதன்மை செயலாளருமான துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் குட் லைப் சென்டரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு தாம்பரம் பகுதி கழக செயலாளர் துரை மணிவண்ணன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

     இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளா் மாவை மகேந்திரன் கலந்துகொண்டு தாம்பரம் குட்லைப் சென்டரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எஸ்.நாராயணன், மாவட்ட துணைச் செயலாளர் குரோம்பேட்டை ஏ.நாசர், முடிச்சூர் ஆர்.ஏ.ஜெய்சீலன், முன்னாள் நகர செயலாளர் ராஜா முகமது, பகுதி அவை தலைவர் பழக்கடை இரா.அன்பு, பொருளாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் ஷாஜகான், வட்ட செயலாளர் டிராவல்ஸ் சிவா,  சஞ்சய் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

    No comments