தாம்பரம்: வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழக கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து தமிழக வெற்றி கழகம்  சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைமை அறிவித்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் தலைமையில்  வக்ஃபு திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் சண்முக சாலை பாரதி திடல் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கில்லி சரத்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments