• Breaking News

    அதிமுக - பாஜக கூட்டணி சூப்பர் ஹிட் ஆகும் - நடிகை நமீதா

     


    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டது.

    அதன்படி, அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இணைந்துள்ளது. சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா நேற்று அ.தி.மு.க., பா.ஜ.க. இடையேயான கூட்டணியை உறுதி செய்தார்.

    இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான நமீதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அ.தி.மு.க. கூட்டணி எப்படி இருக்கும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நமீதா,

    அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். தமிழக பா.ஜ.க.வினர் இடையே புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும்' என்றார்.

    No comments