சமீபமாக சமூக வலைதளங்களில் பரவிய “நித்தியானந்தா உயிரிழந்தார்” என்ற வதந்திகளுக்கு பதிலளிக்க, தன்னைபகவான் நித்தியானந்தா பரமசிவம் என அழைக்கும் ஆன்மீக தலைவர் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், “நான் குறைந்தது 150 ஆண்டுகள் இன்னும் வாழப்போகிறேன். நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போற எண்ணத்துல இருந்தேன். ஆனா இதுக்கு மேல நீங்க வம்பு பண்ணிட்டே இருந்தீங்கனா வேற லெவலுக்கு பண்ணிடுவேன்… 1000 வருஷம் ஆகிடும் என் வாழ்நாள். வேண்டாம், வம்பு பண்ணாதீங்க” என எச்சரிக்கையாக கூறியுள்ளார்.தன்னைச் சுற்றியுள்ள எதிர்ப்புகள், அவதூறுகள் குறித்து நித்தியானந்தா வேதனையுடன் பதிலளிக்கிறார். “நான் இறந்துட்டேன்னு சொல்லி மூணு மாதத்துல 4000 வீடியோக்கள் போட்டிருக்காங்க.
அதை எல்லாம் எப்படி பார்ப்பேன்?இன்னிக்கி நானே உயிரோட இருக்கேனா இல்லையா எனக்கு சந்தேகம் இருக்கு, எல்லா சோசியல் மீடியா யூடியூப், பேஸ்புக் எல்லாம் ஒன்று சேர்ந்து பஞ்சாயத்து கூட்டி ஏதோ ஒரு வீடியோவை போட்டு நான் உயிரோட தான் இருக்கேன் இல்லையா? ஏதோ ஒரு முடிவுக்கு வாங்கப்பா என நக்கலாகவும், சஞ்சலத்துடனும் தெரிவித்தார்.
இதனிடையே, நித்தியானந்தா வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நேரலை வாயிலாக வெளியே வருவார் என அவரது அமைப்பினர் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இணையத்தில் நித்தியானந்தா உயிரிழந்தாரா என்ற கேள்விகள் மற்றும் வதந்திகள் வேகமாக பரவியதை தொடர்ந்து, இந்த வீடியோவால் அவரது உயிர் நிலை குறித்து விளக்கம் வந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
0 Comments