• Breaking News

    பஞ்சாப்: பாஜக மூத்த தலைவர் வீட்டின் மீது குண்டு வீச்சு தாக்குதல்

     


    பஞ்சாப் மாநில பாஜக மூத்த தலைவர் மனோரஞ்சன் கலியா. இவர் பஞ்சாப்பில் பாஜக ஆட்சியின்போது மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். மேலும், இவர் பஞ்சாப் மாநில பாஜக தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அம்மாநிலத்தின் ஜலந்தர் பகுதியிலுள்ள மனோரஞ்சனின் வீட்டில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கையெறி குண்டு வீசியுள்ளனர்.

    இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது. மேலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக்குகளும் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் உள்ளிட்ட பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து கையெறி குண்டு வீசிவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

    No comments