பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து தத்தமஞ்சி, திருப்பதி ஆகிய புதிய வழித்தடங்களுக்கு பேருந்துகளை எம்எல்ஏ மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளர் துவக்கி வைத்தனர்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் இன்று பொன்னேரி TO தத்தமஞ்சி மற்றும் பொன்னேரி To திருப்பதி ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே.ரமேஷ்ராஜ் அவர்களும் புதிய பேருந்துகளைகொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் ,மாவட்ட துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், பாஸ்கர் சுந்தரம் ,பா.செ குணசேகரன், வெங்கடாஜலபதி தமிழரசன், ஈஸ்வரி ராஜா, மற்றும் பொன்னேரி தீபன், ராமலிங்கம் ,வாசுதேவன், ஜெயசித்ரா சிவராஜ் ,நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகளும் பொதுமக்களும் என ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments