திமுக கூட்டணியில் பாமக? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன....
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியார் நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் செய்துவிட்டது என்றார். அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில் பாமக கட்சியில் தற்போது சலசலப்பு நிலவுகிறது.
அதாவது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நிலவும் நிலையில் கட்சியில் பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாக ஜிகே மணி சமீபத்தில் உறுதிப்படுத்தினார். இதற்கிடையில் அன்புமணி ராமதாஸிடம் பாஜக கூட்டணியில் நீடிக்கிறீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு அது பற்றி பின்னர் பேசலாம் என்று கூறி பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
இதனால் பாமக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறப்படும் நிலையில் முதல்வர் ஸ்டானிடம் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுகிறதா என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு தற்போது உள்ள கூட்டணி தான் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடும் என்றார். மேலும் இதன் காரணமாக பாமக எந்த கூட்டணியில் இணைய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments