அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தி, மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட திறன்களை, ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்டும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.இதற்காக, தமிழக அரசு, 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள சோப்பனுார் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், ஐந்து மாணவர்கள் திரைப்பட பாடல்களுக்கு ஆடினர்.
ஒரு மாணவர், வீரப்பன் படம் இருந்த டி - ஷர்ட் அணிந்தும், இரண்டு மாணவர்கள் அரசியல் கட்சி துண்டுகளை அணிந்தும் நடனம் ஆடினர். இதுகுறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோல, இனி திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பி நடனம் ஆடுவது, ஜாதி சின்னங்கள் வைத்துக் கொள்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான புகார்கள் வந்தால், தலைமை ஆசிரியர் மீதும் மற்ற ஆசிரியர்கள் மீதும் கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments