பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக,மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் அதிகாலையில் பல்லடம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகனின் மனைவி கல்யாணி, அவரது மகள் கவிதா, ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 4 பேரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முருகனின் மனைவி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் (19 வயது) என்பவர் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
No comments