டிடிவி தினகரனுக்கு திடீர் நெஞ்சுவலி..... மருத்துவமனையில் அனுமதி…
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் தமிழகம் வந்த அமித்ஷாவை டிடிவி தினகரன் இன்று சந்திக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தகவல் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments