தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் இபிஎஸ்., ஓபிஎஸ்..... வெளியான தகவல்

 


சமீப நாட்களாக அ.தி.மு.க., பா.ஜ., இடையே மீண்டும் கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், இ.பி.எஸ்., டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., எம்.பி.,க்கள் சிலர் அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தனர்.

இந்நிலையில், வரும் 6 ம் தேதி பாம்பன் ரயில் பாலத்திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார். அப்போது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாளை மறுநாள் இரவு மதுரை விமான நிலையத்தில் பிரதமரை சந்திக்க இ.பி.எஸ்.,க்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,க்கும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments