• Breaking News

    கீழ்வேளூர் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் அமிர்த கரைசல் மற்றும் பீஜாமிர்தம் பயன்படுத்தி பயிர்களில் மகசூல் அதிகரிப்பதற்க்கான வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம்

     


    நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் சார்பில் ஊரக வேளாண் அனுபவத்திட்டத்தின்  கீழ் ஆழியூர் கிராமத்தில் வேளாண் தொழில் நுட்பம் குறித்து செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது .

     இதன் அடிப்படையில் தற்போதைய வேளாண் நுட்பங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தினர்.இதில் அமிர்த கரைசல் மற்றும் பீஜாமிர்தம் பயன்படுத்தி பயிர்களில் அதிக மகசூல் காணும் ஊட்டச்சத்து நுண்ணூட்டத்தினை பயன்படுத்தும் முறையை நேரடி செயல் விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தனர். 

    இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவிகளானஅபிநயா,கோபிகா,ஜனனி, ஜெப ஜாண்சி, ஜோஸ்னா, ஜிஷாமேரி,மகா லட்சுமி, செளமியா ஆகியோர் கலந்து கொண்டு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    No comments