• Breaking News

    மேடையில் நயினார் நாகேந்திரன்..... மேடைக்கு கீழே அண்ணாமலை..... பாஜகவில் திடீர் பரபரப்பு

     


    ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 545 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதாவது ஏற்கனவே கட்டப்பட்ட பழைய பாலம் 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அதில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

     இதைத்தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் பல புதிய திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் நயினார் நாகேந்திரன் இருந்தார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை மேடைக்கு கீழே அமர்ந்திருந்தார். 

    ஏற்கனவே புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அவர் அமர்ந்திருந்த நிலையில் அண்ணாமலை கீழே அமர்ந்திருந்தார்.மேலும் இன்றைய நிகழ்வு கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதிய தலைவர் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் விரைவில் அதிகரித்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    No comments