திரவ உயிர் உரமன பஸ்போபாக்டீரியா குறித்து கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் அறிவுரை
நாகை மாவட்டம்,கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் உயிர் உரத்தை பற்றி செயல்திறன் விளக்கம் நிகழ்ச்சி தேவூர் கிராமத்தில் நடைபெற்றது.
அப்போது தேவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, ஊட்டச்சத்துக்களை பயிர்களின் வளர்ச்சிக்கு தெளிப்பதை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த பயிற்சி முகாமில், ஊட்டச்சத்து சப்ளிமெண்ட், அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காட்டப்பட்டது.
பாஸ்போ பாக்டீரியா என்பது, நிலத்தில் கரையாத நிலையில் இருக்கும் மணிச்சத்து போன்ற சத்துக்களை, பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கரைக்க உதவும் நுண்ணுயிர்கள் ஆகும். இது ஒருவகை உயிர் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.இதனை விதை நேர்த்தி மூலமாகவும் நாற்று நனைதல் மூலமாகவும் நேரடி வயலில் இடுதல் மூலமாகவும் மற்றும் நீர் வழி உறமிடுதல் மூலமாகவும் பயர்களுக்கு பயன்படுத்தலாம்.இதனால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும் என்று விவசாயிகளுக்கு மாணவர்கள் அறிவுறுத்தினர்.
No comments