• Breaking News

    பொன்னேரி: சயனாவரம் பழமைவாய்ந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா..... திரளான பக்தர்கள் பங்கேற்பு


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு ஶ்ரீ ஞான பிரசன்னாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


     யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு சிவபெருமானை வணங்கினர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.


    இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம்.பி. பலராமன் பானு பிரசாத் ஜனார்த்தனன். திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி சுந்தரமூர்த்தி.அருள்மிகு காளதீஸ்வரர் திருக்கோயில் சைனா வரம் கும்பாபிஷேகம் செயல் அலுவலர் ம.பாலாஜிசிறுவாபுரிசெயல் அலுவலர்மா.மாதவன் பொன்னேரி சரக ஆய்வர் பெ.முருகன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் .லட்சுமிநாராயணன்ஆண்டார் குப்பம் அ.மி.பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் திரு .A.D ஏ டி.இராஜசேகர் குருக்கள் திருக்கோயில் எழுத்தர் த.சிவ சுதாகர். சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.



    No comments