பொன்னேரி: முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் நிர்வாகிகளுக்கு ஒரு சவரன் தங்க மோதிரம்..... மாவட்டக் கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் அறிவிப்பு.....
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் பொன்னேரி நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், பொன்னேரி நகராட்சி சேர்மன் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், ஆகியோர் ஏற்பாட்டில் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது வருகின்ற 19ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னேரி தொகுதிக்கு வருகை தர உள்ளார் அதற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரும் தமிழக முதலமைச்சருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும் அப்படி சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு 1சவரன் தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சி.எச்.சேகர், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்புவாணன் உமா மகேஸ்வரி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முகமதுஅலவி,ஜெயசித்ரா சிவராஜ்,பா.செ.குணசேகரன், வெங்கடாஜலபதி, ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் முரளிதரன், பொன்னேரி நகர கழக நிர்வாகிகள் வாசுதேவன் ராமலிங்கம்., செங்கல்வராயன், ராமலிங்கம், ஜோதீஸ்வரன் ஈஸ்வரன் பரிதாஜெகன்,ஜவகர்,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர் இறுதியாக பொன்னேரி நகர இளைஞர் அணி அமைப்பாளர் டாக்டர் மா.தீபன் நன்றி கூறினார்.
No comments