• Breaking News

    கும்மிடிப்பூண்டி: கம்மவார் பாளையத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யம் கணபதி ஆலய கும்பாபிஷேகம்


    கும்மிடிப்பூண்டி அடுத்த குமாரபாளையம் ஐஸ்வர்யம் கார்டன் பகுதியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஐஸ்வர்யம் கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த திங்கள்கிழமை தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜை, தன பூஜை, யாகசாலை நிர்மாணம்,   த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாஸ்து சாந்தி, ரஹோக்ண ஹோமம், பிரவேசபலி மிருத சங்கரஹனம், அங்குரார்ப்பணம் ரக்ஷா பந்தனம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் காலை யாக பூஜை,  தீபாரதனை, பிரசாதம் வழங்குதுதல் நடைபெற்றது. 

    முதலில் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல், திரவியஹுதி, பூர்ணாஹுதி,  தீபாரதனை ,பிரசாதம் வழங்குதல் மூன்றாம் கால யாக சாலை பூஜை,  தத்துவ அர்ச்சனை, நாடி சந்தனம், ஸ்பர்சாஹூதி, ஜீவன்யாசம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து புதன்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜை , மகா பூர்ணாஹூதி,  யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. 


    இதனைத் தொடர்ந்து கொட்டும் மழையில் புனித நீர் ஆலய கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புரோகிதர்கள் வேத மந்திரம் முழங்க ஆலய கோபுரத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ ஐஸ்வர்யம் கணபதிக்கு மகா கும்பாபிஷேகமும் மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.



    இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கம்மவார் பாளையம் ஐஸ்வர்யம் கார்டன் குடியிருப்போர் மற்றும் வீட்டு மனை உரிமையாளர்கள், கிராம பொதுமக்கள் முன் நின்று சிறப்பாக நடத்தினர்.

    No comments