பழம்பெரும் நடிகர் பத்மஸ்ரீ மனோஜ் மிஸ்ரா காலமானார்.... பிரதமர் மோடி இரங்கல்

 


பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் மனோஜ் மிஸ்ரா உடல்நலக் குறைவினால் தற்போது காலமானார். இவர் நடிகர் மட்டுமின்றி பிரபலமான இயக்குனரும் ஆவார். இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் கடந்த 1992 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை பெற்றுள்ளார். அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் நடித்துள்ள பல தேச பக்தி திரைப்படங்களின் மூலம் பாரத் குமார் என்ற அடைமொழியையும் பெற்றுள்ளார். இவர் கடந்த 1960 மற்றும் 70’களில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்தார். மேலும் இவருடைய இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள x பதிவில் இந்திய சினிமாவின் முக்கிய சின்னமாக திகழ்ந்து தன்னுடைய தேசபக்தி ஆர்வத்தினை திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த உன்னதக் கலைஞர் மனோஜ் மிஸ்ரா என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவருடைய மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி அவர் ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் மனோஜ் பாஜகவில் இணைந்து சில காலம் பணியாற்றியுளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments