• Breaking News

    திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் வாகனங்களுக்கு யார் அந்த தியாகி ? ஸ்டிக்கார் ஓட்டும் பணி.... அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தொடங்கி வைத்தனர்


    டாஸ்மார்க் ஆயிரம் கோடி ஊழல் செய்த யார் அந்த தியாகி வாகன ஸ்டிக்கர்களை திருவள்ளூர் வடக்கு  மாவட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் முன்னாள் அமைச்சரும் கழக செய்தி தொடர்பாளர் பொன்னையன் ,சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினோத் குமார் ஆகியோர் முன்னிலையில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் யார் அந்த தியாகி என்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கர்களை பொதுமக்களின் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் யார் அந்த தியாகி ? என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஓட்டும் பணி தொடங்கப்பட்டது.

     இதில் மாவட்ட மாணவரணி செயலாளர்   ராகேஷ் மாவட்ட துணை செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர் சியாமளா தன்ராஜ் அம்மா பேரவை இணை செயலாளர்கள் ரமேஷ்குமார், மாவட்ட இணை செயலாளர் டேவிட் சுதாகர் முல்லைவேந்தன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி சி மகேந்திரன் ஒன்றிய துணை செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



    No comments