• Breaking News

    மதத்தை கேட்டு தாக்குதல்.... திருமணம் ஆகி ஆறு நாட்களே ஆன இந்திய கடற்படை அதிகாரி பலியான சோகம்

     


    காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர். தங்கள் குடும்பத்தினர் குண்டு காயங்களுடன் தரையில் சரிந்து விழுந்ததைப் பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.

    இந்நிலையில் திருமணம் ஆகி ஆறு நாட்களே ஆன கடற்படை அதிகாரியான 26 வயதே ஆன லெப்டினன்ட் வினய் நர்வால் அவர்கள் பகல்கம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஆறு நாட்களுக்கு முன்புதான் திருமணமாகி, தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை அதிகாரியான அவர், நேற்று நடந்த மிகவும் கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் பலியானார்.

    அரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், தனது மனைவியுடன் பஹல்காமிற்கு முதல் பயணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    "நாங்கள் பெல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்... தீடீரென வந்த பயங்கரவாதி என் கணவரை சுட்டுக் கொன்றார். துப்பாக்கியுடன் வந்த அவர், என் கணவரின் பெயரை கூறச் சொன்னார்.. பின்னர் அவர் ஒரு முஸ்லிம் அல்ல என்று கூறிவிட்டு,  கொடூரமாக சுட்டுக் கொன்றார்," என்று அந்த அதிகாரியின் மனைவி நடுங்கும் குரலில் கூறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

    தகவல் அறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடம் நோக்கி விரைந்தனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    No comments