• Breaking News

    போதைப்பொருள் விவகாரம்..... மலையாள நடிகர் ஷைன் டாம் கைது

     


    மலையாள நடிகர் ஷைன் டோம் சகோ, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, இன்று காலை போலீசில் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். NDPS சட்டத்தின் பிரிவுகள் 27 (போதைப்பொருள் உட்கொள்ளல்) மற்றும் 29 (சதி மற்றும் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த புதன்கிழமை இரவில், போலீசார் ஹோட்டலில் சோதனைக்கு வந்திருப்பதை அறிந்ததும், 3வது மாடியில் இருந்த அறை ஜன்னலில் இருந்து 2வது மாடிக்கு குதித்து, அதன் பிறகு நீச்சல் குளத்தில் குதித்து தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

    கோச்சியில் உள்ள எர்ணாகுளம் நார்த் போலீஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு வக்கீல்களுடன் ஹாஜராகிய ஷைனிடம் விசாரணை நடந்தது. மேலும், அவருடைய மருத்துவ பரிசோதனையும் போலீசார் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், ‘சூத்ரவாக்யம்’ படத்தின் படப்பிடிப்பின்போது போதைப்பொருள் தாக்கத்தில் தவறான நடத்தை காட்டியதாக நடிகை வின்ஸி அலோஷியஸ் புகார் அளித்திருந்தார். இது குறித்து மலையாள திரைப்படக் கூட்டமைப்புக்கும் (AMMA) புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரை போலீசில் எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

    No comments