ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 06) ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் மதியம் 1:25 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார்.இங்கு சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு 1:55 மணிக்கு வெளியில் வந்து அங்கு கூடியிருந்த பக்தர்களை மகிழ்ச்சியுடன் கைகூப்பினார். பின் காரில் புறப்பட்டு ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் விழா நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு சென்றார்.
அப்போது தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக கோவில் வந்த பிரதமர் மோடிக்கு பூர்ண கும்ப மரியதை அளிக்கப்பட்டது.
No comments