• Breaking News

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்.? மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

     


    தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 முதல் 90 நாட்களுக்குள் அனைத்து வகை மசோதாக்கள் மீதும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.பத்து மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவியை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments