ஐபிஎல் தொடர்..... லக்னோ அணியுடன் எப்போது இணைகிறார் மயங்க் யாதவ்..? வெளியான தகவல்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமாகி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவை இந்த சீசனுக்காக ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது.
ஆனால் காயம் காரணமாக அவர் இதுவரை லக்னோ அணியுடன் இணையவில்லை. பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அகாடமியில் காயத்தில் இருந்து மீளுவதற்கான பயிற்சிகளை எடுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் ஐ.பி.எல். தொடருக்கு திரும்புவது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள மயங்க் யாதவ் நாளை (ஏப்ரல் 15-ம் தேதி) லக்னோ அணியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள லக்னோ அணிக்கு இவரது வருகை நிச்சயம் வலுவானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
No comments