கீழையூர் அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலவிளக்கம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாண் கள செயல் விளக்கம் வேளாண் கல்லூரி மாணவர்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து மாணவர்கள் கீழையூர் ஒன்றியம் மடப்புரம் கிராமத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பயிர்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் களைகளை தவிர்க்கவும் தழைக்கூளம் உருவாக்கும் முறையை செயல் விளக்கம் செய்தனர்.
மேலும் தென்னையில் போறான் நுண் ஊட்டத்தினை எருக்குச் செடியை கொண்டு இயற்கையாக பெருக்கும் வகையில் செயல்முறைகளை செய்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர் இதனை அக்கிராமம் விவசாயிகள் வரவேற்று மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த. கண்ணன்
No comments