கப்பலில் வேலை, டாலரில் சம்பளம் என பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் தலைமறைவு..... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி.வெளிநாட்டு வேலை வாங்கித் தரும் ஏஜென்டாக பணிபுரிவதாக தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளதாக தற்பொழுது புகார் எழுந்துள்ளது.தென்னாப்பிரிக்காவில் கப்பலில் வேலை என்றும், டாலரில் சம்பளம் தரப்படும் என்று தெரிவித்து திருகளாச்சேரியைச் சார்ந்த முகமது அப்சர் என்பவரிடம் மூன்று தவணைகளில் சுமார் இரண்டரை லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
இதேபோல் மேலும் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ள ராஜீவ் காந்தி,தற்பொழுது தலைமறைவாகிவிட்டார்.பணம் கொடுத்தவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் செல்போனை எடுப்பதில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முகமது அப்சர்,முகமது ரிபாய், ஜாவித் பைஜ் ஆகிய மூன்று பேரும் தனித்தனியே மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பேரிடமும் சுமார் 5 லட்ச ரூபாய் வரை பணம் பெற்று ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.இதே போல் பலரிடமும் ராஜீவ் காந்தி வெளிநாட்டுக்கு வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments