அதிமுக இணைந்தது மகிழ்ச்சி..... திமுகவை வேரோடு பிடுங்குவோம்..... பிரதமர் மோடி உறுதி
தமிழகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி அமித்ஷா அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உறுதிப்படுத்திய நிலையில், பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் என்றும் அறிவித்தார்.
அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அதிமுக இணைந்தது மிகவும் மகிழ்ச்சி என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அதிமுக இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் பிற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாட்டை புதிய முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வோம். தமிழ்நாட்டிற்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வோம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஒரு தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உறுதி செய்வோம்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் ஊழல் மற்றும் பிளவுபடுத்தும் திமுகவை வேரோடு பிடுங்குவோம். மேலும் அதை எங்கள் கூட்டணி நிச்சயம் செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.
No comments