சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மண்ணிசை அரங்கம், கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் 2072 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பெருநகர சென்னை மாநகராட்சியின்15வது மண்டலக் குழு தலைவர் மற்றும் சோழங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் நீலாங்கரை வி.இ.மதியழகன் தலைமையில், நீலாங்கரை சன்பீம் பள்ளி வளாகத்தில் 31.03.2025 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சோழங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி கழக செயலாளர் ச.அரவிந்த் ரமேஷ், முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் எட்டியப்பன், 14வது மண்டல குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.இ.பாண்டியன், புனித தோமையார்மலை ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
0 Comments