கடையம்பெரும்பத்து ஊராட்சியில் பயனாளிகள் இருவருக்கு வீடு கட்டிட ஆணையினை ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார்.
கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம்பெரும்பத்து ஊராட்சியில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடையம்பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை வகித்து, பயனாளிகளான ஆசீர்வாதபுரம் நவராஜ், மேட்டூர் எப்சி ஆகியோருக்கு ஆணைகளை வழங்கி பேசினர். இந்நிகழ்ச்சியில் கடையம்பெரும்பத்து திமுக நிர்வாகி பரமசிவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெர்துமக்கள், ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments