பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் பம்மல் மண்டல அலுவலகம் அருகில் பம்மல் தெற்கு பகுதி செயலாளர் 1வது மண்டல குழு வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாராக மாண்புமிகு குறு சிறு (ம) நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து 2000 நபர்களுக்கு மோர், தர்பூசணி, கிருனி, வெள்ளரி, இளநீர், குளிர்பானங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், மாவட்ட மாநகர தொகுதி பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் வட்டக் கழகச் செயலாளர்கள் வட்ட கழக நிர்வாகிகள் வட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments