அம்மாபட்டினம் ஆண்கள் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தக்கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினம் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தக்கோரியும், பெண்கள் தொடக்கப் பள்ளியை இருபாலர் தொடக்கப்பள்ளியாக ஒருங்கிணைப்பு செய்யக்கோரியும் மக்கள் விழிப்புணர்வு மைய தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான நூர்முகமது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
No comments