மதுரையில் ரவுடி என்கவுண்டர்...... போலீஸ் கமிஷனர் லோகநாதன் விளக்கம்


 மதுரையில் ரவுடி சுபாஷ்சந்திரபோஸ் நேற்று இரவு போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் சென்றார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும் போது:-

சுபாஷ் சந்திரபோசுக்கு காளீஸ்வரன் கொலை வழக்கு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு இருக்கிறது. இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது துப்பாக்கி வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட முயன்றுள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார்.மேலும், மதுரை மாநகர் பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments